பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ரவிபுடி, பொங்கல் பண்டிகை அன்று ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ என்ற படத்தை வெளியிட்டார். இந்த திரைப்படம் ₹300 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இப்படத்தையடுத்து, அனில் ரவிபுடி, மெகா ஸ்டார் சிரஞ்சீவியை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இப்படத்தை ஷைன் ஸ்கிரீன்ஸ் சினிமாவின் சாஹு கரபதி தயாரிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் தற்போது முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த சனிக்கிழமை, இயக்குநர் அனில் ரவிபுடி மற்றும் இசையமைப்பாளர் பீம்ஸ் சிசிரோலியோ, விசாகப்பட்டினம் சிம்மாசலம் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. கதாநாயகியாக அதிதி ராவ் நடிக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.