நடிகர் தனுஷ், தற்போது ‘இட்லி கடை’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதன் பின்னர், இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற கதைகளை கவனித்து தேர்வுசெய்து வருகிறார்.

அதன்படி, போர் தொழில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் ஒரு புதிய படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவரது படத்துடன் சேர்த்து, ‘லப்பர் பந்து’ பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் மற்றொரு படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார்.

இந்த புதிய திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை, மேலும், தமிழரசன் பச்சைமுத்து இயக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.