இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், ஏற்கனவே தமிழில் கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து, ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், கடந்த சில ஆண்டுகளாக ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.

தற்போது அர்ஜித் ஷங்கர், கதாநாயகனாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை, இயக்குனர் அட்லியின் உதவி இயக்குனராக இருந்த சிவா இயக்குகிறார்.
இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் அர்ஜித் ஷங்கருக்கு ஜோடியாக, பிரேமலு படத்தின் மூலம் பிரபலமான நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.