நடிகர் ரவி மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது சுதா இயக்கத்தில் உருவாகி வரும் ‛பராசக்தி’ திரைப்படத்தில், அவர் முதன்முறையாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-ன் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் ‛பென்ஸ்’ திரைப்படத்தை, ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த படத்தில் நிவின் பாலியுடன் சேர்த்து இன்னொரு வில்லன் கதாபாத்திரமும் இடம்பெறுகிறது. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரவி மோகன் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.