தெலுங்குத் திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகர்களில் ஒருவர் நானி. கடந்த மே 1-ஆம் தேதி அவர் நடித்த ‘ஹிட்-3’ திரைப்படம் வெளியானது மற்றும் அந்த படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதே நேரத்தில், காதல் கதைகளில் அதிகமாக நடித்திருந்த நானி தற்போது தனக்கு மாறுபட்ட கதைகளில் நடிக்கும் வாய்ப்புகளை தேடிக்கொண்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் நானி தனது பெயரை மாற்றப்போகிறார் என்பதுபோன்ற தகவல் தற்போது டோலிவுட் ஊடகங்களில் பரவி வருகிறது.
நானியின் இயற்பெயர் கண்டா நவீன் பாபு என்பது. ஆனால் திரையுலகில் ஆரம்பகட்டம் முதல் ‘நானி’ என்ற பெயரில்தான் அவருடைய பயணம் தொடங்கியது. மேலும், தெலுங்கு சினிமாவில் அவர் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி என்ற பெயராலும் பெரிதும் அறியப்படுகிறார். இந்நிலையில், அவர் திடீரென தனது பெயரை மாற்ற உள்ளதாக வருவதாக கூறப்படும் செய்தி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.