தமிழில் கார்த்தியின் ‘சர்தார் 2’, ‘வா வாத்தியார்’ போன்ற படங்களில் திரைக்கு வர தயாராகி கொண்டு இருக்கின்றன. இந்தப் படங்களை அடுத்து, அவர் நடிக்கும் 29வது படத்தை ‘டாணாக்காரன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தக் கதை 1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் நடைபெறும் கடல் கொள்ளையர்கள் சம்பவத்தை கதைக்களத்தை மையமாகக் கொண்டதாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் நடைபெறவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நானியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நானி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாகவா அல்லது ஒரு கேமியோ தோற்றத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதா என்பது குறித்து தெரியவில்லை. இதற்கு முன்னர், நானியின் ‘ஹிட்’ திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தில், நடிகர் கார்த்தி கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.