தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது பான்–இந்தியா நடிகராக பல பிரமாண்ட திட்டங்களில் நடித்து வருகிறார். அவர் கைவசமுள்ள படங்களில் ‛தி ராஜாசாப்’, ‛பவுஸி’, ‛ஸ்பிரிட்’, ‛கல்கி 2898 AD – 2ஆம் பாகம்’ ஆகியவை அடங்கும். இந்த வரிசையில், பிரபாஸ் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய படத்தை, தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல நடன இயக்குநர் பிரேம் ரக்சித் இயக்கவுள்ளார். அவர் நடன வடிவமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழில் ‛அழகிய தமிழ்மகன்’, ‛சுறா’, ‛வேலாயுதம்’ போன்ற படங்களின் பல பாடல்களுக்கு அவர் நடன இயக்குநராக பணியாற்றிய அனுபவமும் உள்ளது.

