நடிகை காமாட்சி பாஸ்கர்லாவின் சமீபத்திய கருத்துகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. காமாட்சி தற்போது ‘12 ஏ ரெயில்வே காலனி’ என்ற ஹாரர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 21ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இப்படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் காமாட்சி, சமீபத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று சில சுவாரஸ்யமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். “எனக்கு மனச்சோர்வு ஏற்பட்டாலோ அல்லது மன அமைதியை தேடினாலோ, நான் கல்லறைக்குச் செல்வேன். அங்கே சென்றால் ஒரு விதமான நேர்மறை ஆற்றல் கிடைக்கிறது என்று நான் உணர்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
அவரது இந்த வினோதமான ஆனால் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.

