Touring Talkies
100% Cinema

Friday, August 1, 2025

Touring Talkies

என்னைவிட சிறந்த நடிகர்களை அடையாளம் காட்டிவிட்டு தான் செல்வேன் – நடிகர் கமல்ஹாசன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் ‘தக் லைப்’. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் வெளியான நாளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றதால், அதற்கான விளம்பரப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு நடந்தது. ‘தக் லைப்’ படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடல் யூடியூபில் 4 கோடி பார்வைகளைத் தாண்டியுள்ளது. கமல்ஹாசன் எழுதிய வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் ஆகியோர் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். இதையடுத்து வெளியாகிய இரண்டாவது பாடல் ‘சுகர் பேபி’யும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற ‘தக் லைப்’ பட பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் ஒருவர் சாதனை படைத்துவிட்டால் கீழே இறங்கித்தான் ஆகவேண்டும், நான் கீழே இறங்கத் தயார். அதேசமயம், எனக்கு அடுத்த தலைமுறையில் என்னை விட மிகச்சிறந்த 4 நடிகர்களையாவது உங்களுக்கு அடையாளம் காட்டுவேன் பின்னர் தான் நான் செல்வேன். இது எனது குருமார்களுக்கு நான் கொடுக்கும் தட்சணை என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News