இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் திறமையான ஆல்ரவுண்டர் வீராங்கனை சஜீவன் சஜனா, நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கிய உதவி குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். பெண்கள் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த சஜனாவின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஆவார். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களை கடந்து வெற்றி பெற்ற வீராங்கனையாக அவர் விளங்குகிறார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சிவகார்த்திகேயன் நடித்த கானா திரைப்படத்திலும் சஜனா சிறப்பாக நடித்திருந்தார்.

தற்போது ESPN ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயன் அவர்கள் தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உனக்கு ஏதாவது உதவி தேவையா? என்று கேட்டதாக சஜனா தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த அவர், அண்ணா, என் கிரிக்கெட் கிட் முழுமையாக பழுதாகிவிட்டது. எனக்கு புதிய ஸ்பைக்குகள் தேவை,” என்று கேட்டதாக கூறினார்.
ஒரு வாரத்திற்குள் எனக்கு அவரிடயபுதிய ஸ்பைக்குகள் கிடைத்தன. அந்த நேரத்தில், சேலஞ்சர் டிராபி போட்டியில் பங்கேற்க அவர் தயாராகி கொண்டிருந்தார். அங்கு சென்றால், உள்ளூர் மக்கள் அவரின் குடும்ப நிலைமை குறித்து கேட்பார்கள், அப்போது பதற்றமடைவேன் என அவர் நினைத்ததாக கூறினார். ஆனால் எதிர்பார்த்ததை விட, அனைவரும் அவருக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்ததாகவும், அவர்களின் ஆதரவு தனக்கு மிகுந்த உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.