ரஜினி நடித்த சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற படங்களை இயக்கியவர் ஷங்கர். தற்போது ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி உள்ளார், மேலும் அந்த படம் வருகிற 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கரிடம், “மீண்டும் ரஜினியை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள்?” என்று கேட்டுக்கப்பட்டது.
அதற்கு, ”ரஜினிக்கு பொருத்தமான கதைகள் உருவாகும்போது, கண்டிப்பாக மீண்டும் அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன்” என்று அவர் பதிலளித்துள்ளார்.
இதனால், கேம் சேஞ்சர் படத்துக்கு பிறகு இந்தியன்-3 மற்றும் வேள்பாரி போன்ற படங்களின் வேலைகளில் ஈடுபடும் ஷங்கர், அதன்பின் மீண்டும் ரஜினியுடன் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.