Touring Talkies
100% Cinema

Sunday, August 10, 2025

Touring Talkies

ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண திரண்ட ரசிகர்களை கண்டு ஆச்சரியமடைந்தேன் – நடிகர் பாபி தியோல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளனர். சமீபத்தில் நடிகர் பாபி தியோல் அளித்த ஒரு பேட்டியில் ஜனநாயகன் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், விஜய்யின் திரைப்படத்தில் நான் நடிக்கிறேன் என்ற செய்தி வெளியானதுமே பலரும் என்னை தொடர்பு கொண்டு என்னிடம் படத்தை குறித்த அப்டேட்களை ஆர்வமாக கேட்டார்கள். அதேபோல் பல சமயங்களில், ஜனநாயகன் படப்பிடிப்பு தளங்களுக்கு ரசிகர்கள் விஜய்யை காண திரண்ட பல சமயங்களில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. இந்தநிலை தொடர்ந்ததால் பெரும்பாலான காட்சிகளை ஸ்டுடியோவுக்குள்ளேயே படமாக்கப்பட்டது.

நள்ளிரவில் ரகசியமாக விஜய் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டு நடந்தாலும் அங்கும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் சூழ்ந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News