Touring Talkies
100% Cinema

Monday, June 30, 2025

Touring Talkies

கதாநாயகனாகவே தொடர எனக்கு விருப்பம்… நடிகர் பிரதீப் ரங்கநாதன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்தும், அஸ்வத் மாரிமுத்து இயக்கியும் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்த இந்தப் படம், 2024-ஆம் ஆண்டு அதிக லாபம் ஈட்டிய திரைப்படமாக அமையிறது. இப்படத்தின் 100வது நாள் விழா சென்னை நகரில் நடைபெற்றது.

இந்த விழாவில் உரையாற்றிய நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, “எனக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கும் நீண்ட கால நெருக்கம் உள்ளது. அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கும்போது, ஒரு சிறிய வேடம் தருகிறேன் என்று கூறினார். ஆனால், நான் அதற்குப் பதிலாக, காதல் திரைப்படங்களில் அமெரிக்க மாப்பிள்ளை அல்லது வில்லன் வேடங்களில் நடிக்க மாட்டேன். கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்றென்றும் கூறி, அதற்கான முயற்சிகளில் இறங்கினேன்.

நான் இயக்கிய ‘கோமாளி’ படம் வெற்றி பெற்றது. அதன்பின் நான் எழுதி, இயக்கி நடித்த ‘லவ் டுடே’ வெற்றி பெற்றது. அதன் பிறகு நாங்கள் இணைந்து ‘டிராகன்’ படத்தில் வேலை செய்தோம். அந்தப் படமும் ஹிட் ஆனது. இந்த மூன்றுமே 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளன. இந்நிகழ்ச்சியுடன் எனக்கும் இந்த படக்குழுவுக்கும் இடையிலான பயணம் முடிகிறது. இனி விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமே சந்திக்க நேரிடும்” என்றார்.

மேடையில் பிரதீப் ரங்கநாதனின் தோற்றமும் பேச்சுமும் நடிகர் தனுஷை நினைவுபடுத்துகிறது என பலரும் கருத்துகள் தெரிவித்தனர். தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கும் ‘எல்ஐகே’ மற்றும் கீர்த்திவாசன் இயக்கும் ‘டியூட்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரதீப்.

- Advertisement -

Read more

Local News