ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கிறது. இதில், கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, அஞ்சலி மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ‘கேம் சேஞ்சர்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை அஞ்சலி கூறியபோது, கேம் சேஞ்சர்’ படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி. என் அம்மாவின் பெயரும் பார்வதிதான்.
கதையைக் கூறும்போது, இயக்குநர் ஷங்கர் இந்தக் கதாபாத்திரத்தின் பெயரை சொன்னதும் என் அம்மா நினைவுக்கு வந்தார். இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் பெரிய முயற்சிகள் தேவைப்பட்டது. அதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். இந்த படம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.