மாளவிகா மோகனன், மலையாள படமான ‛பட்டம் போலே’ மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‛ஹிருதயபூர்வம்’ நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, தமிழில் ‛சர்தார் 2’, தெலுங்கில் ‛தி ராஜாசாப்’ படங்களில் நடித்துள்ளார். இதில், ‛தி ராஜாசாப்’ படத்தில் அவர் பிரபாஸ் ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் 2026 ஜனவரி 9 அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அவர் அறிமுகமாகிறார்.
இதுகுறித்து மாளவிகா பேசுகையில், சினிமா எனக்கு பிடித்த ஒன்று தான். ஆனால், கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள முடியாமல், ஓய்வின்றி 24 மணி நேரமும் உழைக்க வேண்டிய நிலை உள்ளது. ஒருநாள் கூட விடுமுறை எடுக்க முடியவில்லை என்றார்.இதற்கு ரசிகர்கள் ‛அப்படி என்றால் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது தானே? என்று கேள்வி எழுப்ப, மாளவிகா சிரித்தபடி ‛அது முடியாதே’ என்று பதிலளித்துள்ளார்.