Monday, January 6, 2025

ஷங்கர் அவர்களின் படத்தை ‘பிளாக்’ல் டிக்கெட் வாங்கி பார்த்து ரசித்துள்ளேன்… கேம் சேன்ஜர் பட விழாவில் பவன் கல்யாண் கலகலப்பு பேச்சு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் வெளியீட்டுக்கு முன்பான விழா நேற்று ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “சென்னையில், ‘ஜென்டில்மேன், பிரேமிகுடு’ படங்கள் பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தவன் நான். அவர் எப்போதும் தனது திரைப்படங்கள் மூலம் சமூகக் கருத்துக்களை வழங்குபவர். ஷங்கர் சாரின் படங்களை தெலுங்கு ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். அவர் தெலுங்கில் நேரடிப் படம் எடுக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன்.கேம் சேஞ்சர் தயாரிப்பாளரான தில் ராஜு எனது ‘தொலி பிரேமா’ படத்தை வினியோகித்தார். ‘வக்கீல் சாப்’ படத்திற்கு அவர் கொடுத்த சம்பளம் ஜனசேனா கட்சியை நடத்த உந்து சக்தியாக உதவியாக இருந்தது.

ஹனுமான் ஜி எப்போதும் ராமரின் காலடியில் காணப்படுபவர், அதனால்தான் எங்கள் குல தெய்வமான ஹனுமனின் பெயரால் எனது தந்தை அவருக்கு ராம் சரண் என்று பெயரிட்டார். அபரிமிதமான பலம் பெற்றிருந்தாலும், பகவான் ஹனுமான் எப்போதும் அடக்கமாகவே இருந்தார். ராம் சரண் ஹனுமான் ஜி போன்றவர்.என் அண்ணன் சிரஞ்சீவி எனக்கு அப்பா மாதிரி. ராம் சரணை எனது மகனாக அல்ல, எனது தம்பியாகவே நடத்துகிறேன். அவர் சிறுவயது முதலே மிகவும் ஒழுக்கமானவராக இருந்தபோது, நான் என்னுடைய பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தேன். ஒரு மூத்த சகோதரனாக, கேம் சேஞ்சர் மூலம் அவருக்கு ஏராளமான வெற்றிகள் கிடைக்க வேண்டும். புதிய ஆண்டில் கேம் சேஞ்சர் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் என்று நம்புகிறேன்” என்றார் பவன் கல்யாண்.

- Advertisement -

Read more

Local News