Wednesday, October 2, 2024

எதிர்நீச்சல் 2ல் நான் நடிக்கபோவதில்லை.. நடிகை மதுமிதா கொடுத்த ஷாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடர் மக்களின் மனதை வென்று டாப் இடத்தை பிடித்தது. இந்த தொடரில் ஹீரோயினாக நடித்த மதுமிதாவுக்கு மிகப்பெரும் அளவில் பெயர் புகழ் கிடைத்து தமிழ் சின்னத்திரையில் முன்னணி ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்தார். எதிர்நீச்சல் -2 தொடருக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இதிலும் மதுமிதாவே ஹீரோயினாக நடிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் எதிர்நீச்சல் 2 வில் நடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். அவர் இன்று, (அக்டோபர் 2) வெளியிட்டுள்ள பதிவில், ‘சில காரணங்களுக்காக நான் எதிர்நீச்சல் 2 தொடரில் தொடரப்போவதில்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எதிர்காலத்தில் புதிய தொடரில் மீண்டும் வந்தால் இதே அன்பையும், ஆதரவையும் தருவீர்கள் என்று நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News