நடிகர் ரஜினிகாந்த் நேற்று உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்றிரவு தகவல்கள் வெளியாகின. வயிற்று அசௌகரியம் வழக்கமான பரிசோதனை என பலதரப்பட்ட தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை தரப்பில் இருந்து ஒரு அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அவருக்கு இதயத்திற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விவரித்தும் அவர் நலமாக உள்ளார் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தெரவித்திருந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் குணமடைய பிரார்த்திப்பதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.