Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

யுஏ சான்றிதழ் பெற்ற ரஜினியின் வேட்டையன் திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’. வரும் அக்டோபர் 10ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ரஜினிகாந்த், என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக நடித்துள்ளார்.இப்படத்தின் டிரைலர் நாளை (அக்டோபர் 2) ரிலீஸாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், படத்திற்கு தணிக்கை குழு ‘யுஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 47 நிமிடங்கள் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News