Tuesday, January 21, 2025

பிரம்மாண்ட செட்… விறுவிறுப்பாக நடைப்பெறும் சர்தார் 2 படப்பிடிப்பு பணிகள்… வெளியான புது அப்டேட்! #Sardar2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்த ஆண்டின் பொங்கல் வெளியீடாக கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் வெளிவர வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியாவதில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராகக் கார்த்தி நடித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யாவின் ‘ரெட்ரோ’ படம் மே மாதம் 1-ந்தேதி வெளியாக இருப்பதால், கார்த்தியின் படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிடுகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னதாகவே ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பு முடிந்து, ‘சர்தார் 2’ படத்திற்குச் சென்றுவிட்டார் கார்த்தி. ‘சர்தார்’ முதல் பாகத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்‌ஷ்மண் குமார், தற்போது இரண்டாவது பாகத்தையும் தயாரித்து வருகிறார். இதில் கார்த்தி, ஏஜென்ட் சர்தார் சந்திரபோஸ் மற்றும் விஜய் பிரகாஷ் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், ஆஷிகா ரங்கநாத் மற்றும் மாளவிகா மோகனன் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ரஜிஷா விஜயனும் முக்கிய வேடத்தில் இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘வா வாத்தியார்’ மற்றும் ‘சர்தார் 2’ ஆகிய இரண்டுக்கும் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சர்தார்’ முதல் பாகத்திற்கும் இவர் ஒளிப்பதிவாளராக இருந்தார். ‘சர்தார் 2’ படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, அசத்தலான காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இதுவரை 60 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சென்னை படப்பிடிப்புக்குப் பிறகு திண்டுக்கல்லில் அடுத்தகட்டமாக நடைபெறும். பின்னர் வெளிநாட்டில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, கார்த்தியின் 29வது படத்தை ‘டாணாக்காரன்’ திரைப்படத்த இயக்கிய தமிழ் இயக்குகிறார். இது ஒரு பீரியட் திரைப்படமாகும். இயக்குநர் தமிழின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் மையமாகிய, கடற்கொள்ளையர்கள் குறித்த கதையாக இது அமையும் என கூறப்படுகிறது. ‘சர்தார் 2’ படத்தை விட அதிக பொருட்செலவில் உருவாகும் என்கின்றனர். அதிக கிராபிக்ஸ் பணிகள் உள்ளதால், ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மே மாதத்தில் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, படப்பிடிப்பு அப்டேட் மற்றும் ‘சர்தார் 2’ டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News