Touring Talkies
100% Cinema

Friday, June 27, 2025

Touring Talkies

ரஜினியின் கூலி படத்தில் அமீர்கானின் கேமியோ இத்தனை நிமிடங்களா? உலாவும் புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘சிக்கிடு’ சமீபத்தில் வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்த இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் மற்றும் இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் 15 நிமிடங்களுக்கான கேமியோ வேடத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகிய தகவலின்படி, அமீர் கான் மற்றும் ரஜினிகாந்த் இடையே அதிரடி மற்றும் பரபரப்பான காட்சிகள் அந்த 15 நிமிடங்களில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இதற்காக அமீர்கான் சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றதாகத் தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News