பாலிவுட்டைதாண்டியும் தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. இது பல்வேறு மொழிகளில் பல சீசன்கள் கடந்தும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை மலையாள பிக்பாஸ் சீசன் 7 அதன் தொடக்க விழாவுடன் கோலாகலமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியை உலகப்புகழ் பெற்ற நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் ஜிசிலி தக்ரால் என்ற நடிகை. இவரது வருகை அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஹிந்தி பிக்பாஸ் சீசன் 9-ல் சல்மான் கான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தவர். மேலும், இவர் மிஸ் ராஜஸ்தான் பட்டம் வென்றவரும் ஆவார்.
ஒரு மாநிலத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத ஒருவர், அதாவது ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிசிலி தக்ரால் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இது மட்டுமல்லாது, ஹிந்தி திரை உலகில் மூன்று படங்களில் நடித்ததற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகிய இவர், உலகப்புகழ் பெற்ற ராப் பாடகரான ரெட் ராஸ் மற்றும் பல கலைஞர்களுடன் இணைந்து சர்வதேச மியூசிக் சுற்றுப்பயணத்தில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், தற்போது மலையாள பிக்பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக நுழைந்துள்ளார்.