இயக்குனர் சாந்த ரூபன் இயக்கத்தில், இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணியாற்றும் ‘ரெயின்போ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி துவங்கப்பட்டது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ராஷ்மிகா மந்தனா மற்றும் தேவ் மோகன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் படப்பிடிப்பு துவங்கிய பின்பு, இதன் அப்டேட்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கும் ராஷ்மிகா நடிக்கும் இந்தப் படம், ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதைக் அறிந்து கொண்டு, இப்படம் கைவிடப்பட்டதா என்று ரசிகர்கள் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், ராஷ்மிகா நடிக்கும் பான் இந்தியா படமான ‘மைசா’ என்ற புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.