தெலுங்குத் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. இவர், சூர்யாவின் சனிக்கிழமை படத்திற்கு பிறகு ஹிட் 3 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், கே.ஜி.எப் புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.

ஹிட் திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் பெரிய வெற்றியடைந்ததால், தற்போது மூன்றாவது பாகமாக உருவாகியுள்ள இந்த படம், பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகி, வருகிற மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரும், பாடல்களும் வெளியீடு செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த சூழலில், நடிகர் நானி மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு, ஹிட் 3 படத்தினைப் பற்றிய சில அப்டேட்டுகளை பகிர்ந்துள்ளனர். அதன்படி, ஒரு தமிழ் நடிகர் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்றும், அது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். அந்த கேமியோவை காண விரும்பும் ரசிகர்கள் திரையரங்குகளில் படம் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். தற்போது அந்த கேமியோ ரோலில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.