தமிழில் ‘மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘பிச்சைக்காரன் 2’ போன்ற படங்களில் நடித்த காவ்யா தாபர், ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மாடலிங் துறையில் சில விளம்பரங்களில் நடித்திருந்த இவர், சினிமாவுக்கு வருமுன்பு பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்ததை பகிர்ந்துள்ளார்.
அந்த சம்பவத்தைப் பற்றிக் கூறிய காவ்யா, சினிமாவில் நடிக்கும் முன், விளம்பர படங்களில் பணிபுரிந்தேன். அந்தக் காலத்தில் ஒரு இயக்குனர், ஆடிஷனுக்காக அவரது அலுவலகத்திற்கு அழைத்தார். அங்கு அவர் என்னிடம் தவறான சலுகையை எதிர்பார்த்தார். நான்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்து, அந்த வாய்ப்பை மறுத்துவிட்டு வெளியேறி விட்டேன்.
என்னை நடிகையாக பார்க்க வேண்டும் என்பதே என் அப்பாவின் கனவு. அதனால்தான் சினிமாவுக்கு வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.