Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

“ஜென்டில் உமன்” திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“ஜென்டில் உமன்” – எல்ஐசி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரி கிருஷ்ணன், தனது உறவுக்கார பெண்ணான லிஜோமோல் ஜோஸை திருமணம் செய்து கொண்டு சென்னையில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இந்த நிலையில், ஒரு இன்டர்வியூ காரணமாக, லிஜோமோலின் சகோதரி அவர்களது வீட்டில் தங்குகிறார்.

அந்த நேரத்தில், ஹரி கிருஷ்ணன், அவளிடம் தவறாக நடக்க முயல்கிறார். ஆனால், அதே நேரத்தில் லிஜோமோல் வந்து விடுகிறார். இதற்கிடையில், ஹரி கிருஷ்ணன் பற்றி லாஸ்லியா தனது போனில் விசாரிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? லாஸ்லியாவிற்கும் ஹரி கிருஷ்ணனுக்கும் என்ன தொடர்பு? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

பெண்களின் பார்வையில் மாற்றம்

இன்றைய காலத்தில், ஆண் ஆதிக்கம் என்ற திமிரில், கணவன் எவ்வளவு தவறு செய்தாலும் அதை பொறுத்துக் கொண்டு வாழ்ந்த மனைவியர், இப்போது புதுமைப் பெண்களாக மாறிவிட்டனர். அவர்கள், தவறு செய்யும் ஆண்களை சட்டப்படி தண்டனை வாங்கித் தருகின்றனர் அல்லது சில சமயங்களில் தாமாகவே தண்டனை விதிக்கின்றனர். அப்படியான ஒரு பெண்ணின் கதையே இந்த “ஜென்டில் உமன்”.

சமீபத்தில், ஆந்திராவில் கணவன், தவறு செய்த மனைவியை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் வேகவைத்து, குளத்தில் வீசி விட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இயக்குனர் ஜோஸ்னா சேதுராமன், இந்த உண்மைச் சம்பவத்தை திரைக்கதையாக எழுதி, திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இதற்கு ஏற்ற படத்தின் தலைப்பையும் மிக அழகாக தேர்வு செய்துள்ளார்.

நடிப்பின் உச்சம் – லிஜோமோல் ஜோஸ்

படத்தின் முழு பாரம் லிஜோமோல் ஜோஸ் மீது தான் உள்ளது. அமைதியான மனைவியாகவும், கணவன் தவறு செய்யும் போது ஆக்ரோஷமாகவும், அவர் கொடுத்த நடிப்பு அபாரமானது. அதேபோல், ஒல்லியான தோற்றம், திருட்டு முழி என்று பெண்களிடம் லீலைகள் செய்பவராக ஹரி கிருஷ்ணன், தன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

மேலும், லாஸ்லியாவும் தனது பாத்திரத்திற்கேற்ப பங்களித்து ஸ்கோர் செய்கிறார். இப்படத்தில் பலர் நடித்திருந்தாலும், இந்த மூன்று பேரைச் சுற்றியே கதையின் மையம் நகர்கிறது.

இசை, ஒளிப்பதிவு & தொழில்நுட்ப தரம்

கோவிந்த் வசந்தாவின் இசை, பாடல்களிலும் பின்னணி இசையிலும் ரசிக்க வைக்கிறது. காத்தவராயன் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சியும் பளிச்சிடுகிறது.

- Advertisement -

Read more

Local News