ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள, தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படம் பான் இந்தியா படமாக அடுத்த வாரம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் டிரைலர் நேற்று யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது, மேலும் தெலுங்கு ரசிகர்கள் இதை மிகுந்த ஆதரவுடன் வரவேற்று வருகின்றனர்.
தெலுங்கு மொழியில், 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற டிரைலர்களின் பட்டியலில், புஷ்பா 2 44 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. குண்டூர் காரம் டிரைலர் 37 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இப்போது, கேம் சேஞ்சர் டிரைலர் 34 மில்லியன் பார்வைகளை கடந்தும், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
மேலும், கேம் சேஞ்சர் ஹிந்தி டிரைலர் 13 மில்லியன் பார்வைகளையும், தமிழ் டிரைலர் 11 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.