பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் அவர்களுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் 4 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். Mission Impossible தொடர் படங்களின் மூலம் உலகமெங்கும் பெரும் ரசிகர்கள் பெற்றவர் டாம் குரூஸ்.

63 வயதானாலும், சண்டை மற்றும் சாகச காட்சிகளில் டூப் பயன்படுத்தாமல் அவர் நேரடியாகவே நடிப்பார் என்பதால் அவருக்கு உலகம் முழுவதும் தனிப்பட்ட மரியாதை உள்ளது. நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் முக்கிய பங்கை வகித்து வருகிறார்.திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, Academy of Motion Picture Arts and Sciences நிறுவனம் அவருக்கு கவுரவ ஆஸ்கர் அறிவித்தது.
இதற்கு முன்பு அவர்,
• Born on the Fourth of July – சிறந்த நடிகர்
• Jerry Maguire – சிறந்த நடிகர்
• Magnolia – சிறந்த துணை நடிகர்
• Top Gun: Maverick – தயாரிப்பாளர்
என மொத்தம் 4 முறை ஆஸ்கர் பரிந்துரை பெற்றிருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த நிகழ்ச்சியில் டாம் குரூஸ் கவுரவ ஆஸ்கரை பெற்றுக் கொண்டார். அவருடன் டெபி ஆலன், வின் தாமஸ், டோலி பார்டன் ஆகியோரும் கவுரவ ஆஸ்கர் பெற்றனர்.

