பிரபல தென்கொரிய இசைக்குழு BTS-ன் உறுப்பினர்களான RM (கிம் நம்ஜூன்) மற்றும் V (கிம் டேஹ்யூங்) அந்த நாட்டின் விதிமுறைப்படி 19 முதல் 28 வயதுக்குள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ராணுவ சேவையை நிறைவேற்றி வீடு திரும்பியுள்ளனர்.காங்வோன் மாகாணத்தில் உள்ள சுஞ்சியோன் பூங்காவிலிருந்து அவர்கள் இருவரும் ராணுவ உடையில் வெளியேறினர். அப்போது சலுயூட் செய்தும் கை குழுக்கியும் ஒருவரை ஒருவர் வரவேற்றனர். அங்கே கூடியிருந்த செய்தியாளர்கள் முன் RM சாக்ஸபோன் வாசித்து அசத்தினார்.
