கவுதம் கார்த்திக் நடித்த ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படத்தை இயக்கினார். இந்த படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்நிலையில், அவர் அடுத்ததாக ஹிந்தி திரைப்படம் இயக்கப் போவதாக செய்திகள் பரவியிருந்தன, ஆனால் அதற்கு முன்பு தனுஷோடு கமிட்டான D55 படத்தை தான் தற்போது இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக எக்ஸ் தளத்தில் புகைப்படம் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், மகா சிவராத்திரி தினத்தில், சிவபெருமானின் அருள் கிடைத்து, அனைவரும் அமைதியுடனும், நேர்மறையான ஆற்றலுடனும் இருக்க வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார். “நற்றுணையாவது நமச்சிவாயவே” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர், இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும், இதில் எந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இடம்பெறுகிறார்கள் என்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.