கோலிவுட், டோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் பிரபலமான பிசியான இசையமைப்பாளராக பரவி வருகிறார் அனிருத். அஜித்தின் “விடாமுயற்சி” படத்திற்குப் பின்னர், ரஜினியின் “கூலி”, விஜய்யின் “69” போன்ற படங்களுக்கு இசையமைத்து கொண்டிருக்கும் இவர்,விஜய் தேவரகொண்டா நடிக்கும் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
தமிழில் கவின் நடித்து வரும் “கிஸ்” படத்திற்கும் இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் தற்போது அந்த “கிஸ்” என்ற படத்திலிருந்து வெளியேறியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அவர் கமிட்டாகி உள்ள பல படங்கள் மற்றும் சம்பள விஷயங்கள் காரணமாக அனிருத் அந்த படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.