Touring Talkies
100% Cinema

Saturday, June 14, 2025

Touring Talkies

பான்-இந்தியா அளவில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகும் தனுஷின் ‘குபேரா’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி பான் இந்தியா ரீதியில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர்கள் சுனில் நரங் மற்றும் ராம் மோகன் ராவ் சமீபத்திய ஒரு பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது, “குபேரா திரைப்படம் 1600 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே மிகச் செல்வந்தர் ஒருவருக்கும், மிகவும் வறுமையில் தவிக்கும் ஒருவருக்கும் இடையே நிகழும் தீவிரமான மோதல் தான் இப்படத்தின் மையக்கரு.

இயக்குனர் சேகர் கம்முலா இந்தக் கதையை தனுஷிடம் கூறியதும், அவரால் 20 நிமிடங்களுக்குள் இப்படத்தில் நடிக்க ஒப்புதல் கிடைத்தது. இது ஒருபடியாக வித்தியாசமானதாக இருக்கும். ரசிகர்கள் புதுமையான அனுபவத்தைப் பெறுவார்கள்,” என்று தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News