தமிழில் மறைந்த பிரபல நடிகரான முரளியின் மூத்த மகனான அதர்வா, ‘பாணா காத்தாடி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, ‘பரதேசி’, ‘ஈட்டி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போது வளர்ந்து வரும் இளம் தலைமுறை நடிகர்களில் முக்கியமானவராக திகழ்கிறார். தற்போது, டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் தனது முதல் படத்தில் அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158544-656x1024.jpg)
இன்று பிப்ரவரி 13, இப்படத்திற்கு ‘இதயம் முரளி’ என அதிகாரப்பூர்வமாக தலைப்பு வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் அடையாளமாக ‘இதயம்’ படம் இருந்ததால், அதனை நினைவுகூரும் விதமாக இப்படத்திற்கு ‘இதயம் முரளி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும், நட்டி நட்ராஜ், பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், பிரக்யா நக்ரா, ரக்ஷன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158567-683x1024.jpg)
இப்படத்தின் முதல் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 5 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த டீசரில், அதர்வாவின் காதல், காதல் பிரேக்-அப் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த டீசர், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.