இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளதாக இயக்குனர் ஆதிக் சமீபத்தில் உறுதி செய்தார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸின் ராகுல் தயாரிக்கிறார்.

இதற்கிடையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் ஏற்கனவே ஒப்பந்தமாகி விட்டார் என்ற தகவல் வெளியாகியது.
தற்போது, இந்த புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இளம் நடிகை ஸ்ரீலீலாவுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் பிரபலமான சுவாசிகா, இந்த புதிய திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.