Touring Talkies
100% Cinema

Saturday, June 7, 2025

Touring Talkies

அனுஷ்காவின் வேதம் போஸ்டரால் பல விபத்துகள் ஏற்பட்டன – இயக்குனர் கிரிஷ் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2010 ஆம் ஆண்டு, கிரிஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், அனுஷ்கா மற்றும் மஞ்சு மனோஜ் ஆகியோர் இணைந்து நடித்த ‘வேதம்’ திரைப்படம் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் பின்னர் தமிழில் சிம்பு, அனுஷ்கா மற்றும் பரத் ஆகியோர் நடிப்பில் ‘வானம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் வெற்றிப் படமாக இருந்தாலும், தமிழ் பதிப்புக்கு மிதமான வரவேற்பே கிடைத்தது. தற்போது இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனைப்பற்றி இயக்குநர் கிரிஷ் ஒரு பேட்டியில் தெரிவித்தபோது, “வேதம்” படத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தில், நடிகை அனுஷ்காவின் கிளாமர் தோற்றம் கொண்ட ஒரு போஸ்டரை நகரத்தின் முக்கிய பகுதிகளில் விளம்பரமாக வைத்தோம் என்று கூறினார்.

ஆனால், அந்த விளம்பரம் காரணமாக சுமார் 40 சாலை விபத்துகள் நடந்ததாக போலீசில் புகார் வந்தது. இதனையடுத்து, அந்த விளம்பரப் போஸ்டரை எங்களால் நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என அவர் விளக்கியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News