கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா முக்கிய கதாநாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் ‘காட்டி’. இந்த படத்தில் அனுஷ்காவுடன் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

அனுஷ்கா ஒரு அதிரடியான ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியானது பாராட்டை பெற்றது. மேலும், அனுஷ்கா இத்தனை நேர்த்தியாகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா என்று ஆச்சரியப்படவைக்கும் அளவிற்கு சில மிரட்டலான காட்சிகள் அந்த டீசரில் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், இந்த ‘காட்டி’ திரைப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.36 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டோலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை ஒரு ஹீரோயின் கதையின் நாயகியாக நடித்த எந்த ஒரு திரைப்படமும் இத்தனை உயர்ந்த தொகைக்கு விற்பனை செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த ‘காட்டி’ திரைப்படம் ஜூலை 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.