நடிகை அனுஷ்கா மற்றும் விக்ரம் பிரபு நடிப்பில் இயக்குனர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காட்டி’. இப்படத்தில் அனுஷ்கா இதுவரை இல்லாத வகையில் மிகவும் வித்தியாசமான ஆக்சன் கதைக்களத்தில் நடித்துள்ளார்.
இப்படம் போதைப்பொருளான கஞ்சா கடத்தல் பின்னணியில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையாக உருவாகி உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ட்ரெய்லரில் ரத்தம் தெறிக்க அனுஷ்காவும் விக்ரம் பிரபுவும் சேர்ந்து எதிர்களோடு சண்டையிட்டு துவம்சம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இப்படம் செப்டம்பர் 5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே தேதியில் தெலுங்கில் தேஜா சஜ்ஜாவின் ‛மிராய்’ என்ற படமும், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸி படமும் திரைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.