Touring Talkies
100% Cinema

Wednesday, June 18, 2025

Touring Talkies

விஷ்ணு விஷால் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் முதல் பாடலை வெளியிட்ட அனிருத்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். அவரின் சகோதரர் ருத்ரா, ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது திரைப் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த திரைப்படத்தை கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இசையமைப்பாளராக தர்புகா சிவா பணியாற்றியுள்ளார்.

‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகியது. இதில் நடிகர்களான மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி மற்றும் விஷ்ணு விஷால் நடித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் வருகிற ஜூலை 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நடித்துள்ள இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ‘நட்சத்திரா’ என்ற இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை அபிஷேக் சுரேஷ் மற்றும் பிரியாமாலி இணைந்து பாடியுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News