பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ஆலியா பட் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் இருவரும் காதலித்து திருமண செய்துக்கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர்கள் தங்களது குடும்பத்தோடு வாழ மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் ரூ.250 கோடி மதிப்பில் கனவு இல்லம் ஒன்றை கட்டி வருகின்றனர். அந்த வீட்டின் கட்டுமான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலியா பட், தனது மாமியார் நீது கபூருடன் அந்த வீட்டை நேரில் சென்று பார்வையிட்டார். விரைவில் கிரஹப்பிரவேச விழா நடத்துவது குறித்து அந்த நேரத்தில் அவர்கள் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த வீடு ஆறடி உயரம் கொண்ட ஆடம்பரமான ஆறு மாடிகளாக கட்டப்பட்டு வருகிறது.
ரன்பீரின் பாட்டி கிருஷ்ணா ராஜ் கபூரின் நினைவாக அந்த வீட்டிற்கு “கிருஷ்ணா ராஜ்” என்ற பெயர் வைத்துள்ளனர் இந்த வீடு தற்போது வரை மிக நவீன வசதிகளோடும், பாரம்பரிய கலையுடனும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.