Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

200 கோடி வசூல் கிளப்பில் இணைந்த அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்த திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களை நினைவூட்டும் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளதால் படம் ரசிகர்களிடையே கூடுதல் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிம்ரன் நடித்துள்ள காட்சியும் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு அனுபவமாக அமைந்துள்ளது.

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளிலேயே ரூ.30 கோடி வசூலித்துள்ளது. இப்படம் வெளியான 5 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூலைத் தொட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக ஒரு போஸ்டரை வெளியிட்டு தெரிவித்துள்ளது. கடந்த 10ம் தேதி வெளிவந்த இந்த படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், உலகளவில் இப்படம் ரூ.200 கோடி வருமானத்தைத் தாக்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News