தெலுங்கில் முதல் முறையாக ‘ஜடாதரா’ என்கிற படத்தின் மூலம் நுழைந்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா. வெங்கட் கல்யாண் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நடிகை ஷில்பா சிரோத்கர் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தனது முதல் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற மகிழ்ச்சியை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் சோனாக்ஷி சின்ஹா.
