Touring Talkies
100% Cinema

Tuesday, June 10, 2025

Touring Talkies

மிர்சாபூர் சீசன் 4 அப்டேட் கொடுத்த நடிகை ஸ்வேதா திரிபாதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2008ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான் மற்றும் குர்மீத் சிங் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான பாலிவுட் வெப் சீரிஸ் ‘மிர்சாபூர்’ மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதில் பங்கஜ் திரிபாதி, அலி பசல், ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார், அஞ்சும் ஷர்மா, ராஜேஷ் தைலாங், ஷீபா சதா மற்றும் மேக்னா மாலிக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு இதன் இரண்டாவது சீசன் வெளியாகி மீண்டும் பாராட்டுகளை பெற்றது. பின்னர், மூன்றாவது சீசன் கடந்த ஜூலை மாதம் வெளியானது. தற்போது, இந்த வெப் தொடரின் அடுத்த பகுதி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகி வரும் சூழலில், ‘மிர்சாபூர்’ தொடரை திரைப்படமாகவும் உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘மிர்சாபூர்’ மூன்றாம் சீசனில் ‘கஜகாமினி குப்தா’ (கோலு) என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா திரிபாதி, இந்த தொடரின் நான்காவது சீசன் குறித்த அப்டேட் விரைவில் வரும் என கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “இந்தப் பிறந்தநாளில், உங்கள் அனைவருடனும் சில நல்ல செய்திகளைப் பகிர்கிறேன் என்று நம்புகிறேன். கடந்த சீசன் என் பிறந்தநாளில் ஜூலை மாதம் வெளியானது. இந்த ஆண்டும் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கக்கூடிய இந்த தகவல்களைப் பகிர விரும்புகிறேன்” என கூறினார்

- Advertisement -

Read more

Local News