நடிகை ஹனி ரோஸ் நடித்துள்ள ‘ரேச்சல்’ திரைப்படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி என ஒரே நேரத்தில் பான் இந்திய ரிலீஸ் ஆக வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளது.

தமிழில் சிங்கம் புலி படத்தில் அறிமுகமான இவர், படம் துவங்கி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட பல படங்களில் மலையாளம் மற்றும் தமிழில் தொடர்ந்து சீரான இடைவெளியில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், ‘ரேச்சல்’ படத்தில் ஹனி ரோஸ் வித்தியாசமான அதிரடி ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பழிவாங்கும் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் கதையை, நடிகர் நிவின் பாலி நடித்த 1983 மற்றும் ஆக்ஷன் ஹீரோ பைஜூ உள்ளிட்ட படங்களை இயக்கிய அப்ரிட் ஷைன் எழுதியுள்ளார். மேலும், அவர் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து தயாரித்தும் உள்ளார்.

