தெலுங்கு திரைப்பட உலகில் சிறப்பாக வளர்ந்து வரும் இளம் நடிகை பாக்யஸ்ரீ போஸ். தற்போது அவர் விஜய் தேவரகொண்டா, சூர்யா, துல்கர் சல்மான், ராம் பொத்தினேனி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில், அவர் பிரபாஸுடன் ஜோடி சேரவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், “ஹனுமான்” படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், பிரபாஸ் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். சூப்பர் ஹீரோ கதையாக உருவாகும் இப்படத்தில், பிரபாஸ் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட்டிங் நடைபெற்றது. அதில் பாக்யஸ்ரீ போஸும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அவர் இப்படத்தில் பிரபாஸின் ஜோடியாக நடிப்பது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.