கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் “கிங்டம்” ஆகும். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம், அடுத்த மாதம் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தாலும், இதுவரை படத்தின் கதாநாயகி குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மேலும் பாக்யஸ்ரீயும் தனது சமூக ஊடக பக்கங்களில் ‘கிங்டம்’ படத்தைக் குறித்து எந்தவொரு தகவலையும் பகிர்ந்திருக்கவில்லை. இந்த நிலையில், ‘கிங்டம்’ படத்தின் முதல் பாடலின் புரோமோ நாளை (29-ம் தேதி) வெளியாகும் என பாக்யஸ்ரீ போர்ஸ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் அவர் இப்படத்தில் நடித்திருப்பது உறுதியாகி விட்டது என்பது தெளிவாகியுள்ளது.