Friday, December 27, 2024

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.நல்லக்கண்ணு அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்நாட்டின் முன்னணி பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் இரா. நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

தமிழ் மக்களுக்காக நல்லக்கண்ணு ஆற்றிய சிறப்பான பணிகளை நினைவுகூரும் விதமாக, தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி அவரை கௌரவித்தது. இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்ட பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைதளத்தில், “இன்று நூறாவது பிறந்தநாள் கொண்டாடும் விடுதலைப்போராட்ட வீரர், மக்களின் தலைவர், பெருமதிப்பிற்குரிய திரு.நல்லக்கண்ணு ஐயாவுடன் சந்தித்து, எனது அன்பும் வணக்கங்களும் தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டார்.

- Advertisement -

Read more

Local News