சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘கேங்கர்ஸ்’. சுமார் 15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்த இருவரும் மீண்டும் ஒரே திரைப்படத்தில் இணைந்துள்ளதால், படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார்.
அத்துடன் ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த் மற்றும் பக்ஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் வடிவேலு பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். குறிப்பாக, பெண் வேடத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டிரெய்லர் மற்றும் பாடல்கள், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பார்வைக்கு வந்தது. படப்பிடிக்கும்போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை “ஸ்பாட்லைட் வீடியோ”வாக படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சிம்பு இந்த படத்தைப் பார்த்த பிறகு படக்குழுவை புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “‘கேங்கர்ஸ்’ படம் பார்த்தேன். முழுக்க முழுக்க சிரிப்புதான். வடிவேலுவின் மாயாஜாலம் முழு படத்தையும் கட்டி வைக்கிறது. சுந்தர்.சி அண்ணாவுக்கும் படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகள்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.