Touring Talkies
100% Cinema

Wednesday, June 11, 2025

Touring Talkies

தான் நடித்த படம் தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளருக்கு உயர்ந்த மனதுடன் தனது பாதி சம்பளத்தை திருப்பி அளித்த நடிகர் சித்து ஜொன்னலகடா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனது நடிப்பில் உருவான படம் தோல்வியடைந்ததால், அதன் மூலம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் பொருட்டு, தானுக்கான சம்பளத்தில் 50 சதவீதத்தை திரும்பக் கொடுத்துள்ளார் தெலுங்கு நடிகர் சித்து ஜொன்னலகடா.

‘குண்டூர் டாக்கீஸ்’, ‘டிஜே தில்லு’, ‘தில்லு ஸ்கொயர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றவர் சித்து ஜொன்னலகடா. சமீபத்தில் அவரது நடிப்பில் ‘ஜேக்’ என்ற படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை பொம்மரிலு பாஸ்கர் இயக்கியிருந்தார். நடிகை வைஷ்னவி சைதன்யா கதாநாயகியாக நடித்திருந்தார். பிரசாத், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் தயாரித்திருந்தார். ஆனால், இந்த படம் கடந்த மாதம் வெளியானதும் எதிர்பாராத விதமாகத் தோல்வியடைந்து, தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த படத்தில் நடிப்பதற்காக சித்து ஜொன்னலகடா ரூ.10 கோடி சம்பளமாக பெற்றிருந்தார். ஆனால், ஜி.எஸ்.டி. விலக்கு விலகிய நிலையில், ரூ.4.75 கோடியை அவர் திருப்பிக் கொடுத்துள்ளார். இது அவரது நேர்மையும், தொழில்முறை நெறிமுறையையும் வெளிப்படுத்துவதால் அவருக்கு ரசிகர்களும், திரைத் துறையினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News