ஜெர்சி’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் கெளதம், ராம்சரணுடன் ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்தப் படம் பிறகு கைவிடப்பட்டது. பின்னர், விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘கிங்டம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்நிலையில், ராம்சரணின் படத்தை ஏன் இயக்கவில்லை என்பது குறித்து கெளதம் ஒரு பேட்டியில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நான் ராம்சரணிடம் ஒரு கதையை கூறினேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்னர் அந்தக் கதையை முழுமையான திரைக்கதையாக உருவாக்கினேன். ஆனால் அதன் பிறகு அந்த திரைக்கதை ராம்சரணுக்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்தேன். ராம்சரண் போன்ற பெரிய நட்சத்திரத்துடன் பணியாற்றும் வாய்ப்பு ஒரேமுறை தான் கிடைக்கும். எனவே, எதையாவது ஒரு படத்தை அவர் மூலம் இயக்கவேண்டும் என்று என்னவில்லை. இதை அவரிடமே நேரடியாக கூறினேன். அதன்பின் நாங்கள் இருவரும் சரியான கதை அமையும்போது மீண்டும் இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம்” என தெரிவித்தார்.
தற்போது கெளதம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்துள்ள படம் ‘கிங்டம்’. இது பெரும் எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்ததாலும், கலவையான விமர்சனங்களை பெற்றதாலும் குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகிய முதல் 3 நாட்களில் ரூ.67 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.