தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணியில் திகழும் நடிகர் பிரபாஸ், இன்றுவரை திருமணம் செய்யாமல் இருப்பதால், அவரைச் சுற்றிய திருமண வதந்திகள் அடிக்கடி பரவி வருகின்றன.

சமீபத்தில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரின் மகளுடன், நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக ஒரு வதந்தி பரவியது.
இந்த வகையான வதந்திகள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் நிலையில், பிரபாஸின் குழு இது தொடர்பாக விளக்கமளித்து, அந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது போலியான செய்தி என்றும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பிரபாஸ் “தி ராஜா சாப்”, “கண்ணப்பா” உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.